Monday, 28 February 2011

மேதைகள் சொன்ன தத்துவங்கள்:


1. வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே....


2.எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 % நல்லவனுமில்லே. 

எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 %  கெட்டவனுமில்லே.

 

3.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
APJ Abdul Kalam.


4. நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்

5. மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?

படித்ததில் பிடித்தவை .........


வாழ்க்கை தத்துவம்

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
வாழ்க்கையும் அப்படி தான்....
முடியும் வரை தெரிவதில்லை....
வாழ்வது எப்படி என்று.


.காலம் 

இன்று வந்தது
நாளையும் வரும்

ஆனால் நேற்று வராது
மூடிக்கொண்ட கதவு அது

திறந்து பார்க்க சாவியும்
இல்லை

சேர்த்து வைக்க வழியும்
இல்லை

துரத்திப் பிடிக்க ஒடுவோம்
எங்கே தான் போய் விடும்

நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர்
இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம்

நேரத்தின் பின்னால்
ஓடிப்போவோம் வாருங்கள்

வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம்
நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள்


பனித்துளி  

உன்
பாதம் படுவதற்காகவே
படிந்திருக்கிறது
உன்
வீட்டு படியில் பனித்துளி ……,
கொஞ்சம் பார்த்துசெல்
பாத சூட்டில் கரைந்து விட போகிறது
உனக்காக காத்திருக்கும் ஒன்றை
சிதைத்து விடாதே …..!!
என்னை சிதைத்து போல் ….!!!


அன்பின் தனி சிறப்பே நட்பு. 

"நட்புற்று அமைந்த வழக்கென்ப வையகத்தில் நட்புற்றோர் அடையும் சிறப்பு"

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.



பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.

என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.



இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.

அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.



பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.



வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை. 




என் கனவுகளில் ஒன்று.......


கல்லூரிக்காதல் ...


நான் இப்போது கண்ணாடி அணிகின்றேன் 
ஏனெனில் 
என் கண்ணில் இருக்கும் உன்னை யாரும் பார்க்காமல் இருப்பதற்காக   

கல்லூரிக்காதல்......


நான் எழுத நினைப்பது
 உன் இதயம் எனும் ஏட்டில்
அதை அறிந்தும் அறியாதது 
போல் ஏன் ஆட்டோகிராப் ஐ நீட்டுகிறாய்.......... 

அன்பின் அப்பா !



«ôÀ¡....
«ýÀ¢ý «ôÀ¡ !
±ý «Õ¨Á «ôÀ¡...
þÉ¢ ±ýÚ ¯í¸¨Çì ¸¡ñÀÐ..
¯í¸û ÌÃø §¸ð¸¡Ð ±ý ŢƢ¸û àí¸¡§¾ «ôÀ¡...
±ÉìÌ μ÷ ¿øÅÆ¢ À¢È측¾¡ ±É
±ý¨É Å¢¼ ¿£í¸û «øÄÅ¡ ¸Å¨ÄôÀðË÷¸û...
þýÚ ±ÉìÌ μ÷ ¿øÅÆ¢ À¢Èó¾¢Õì¸
À¡÷ôÀ¾üÌ ¿£í¸û þøÄ§Â «ôÀ¡...
¾õÀ¢ ¾õÀ¢ ±ýÚ ¯Â¢¨Ã§Â ¨Åò¾¢Õó¾£÷¸§Ç..
¯í¸¨Ç Å¢ðÎ ¿¡ý àà §¾ºõ ¦ºýȾ¡Ä¡..
¿£í¸û þù ¯Ä¨¸¨Åð§¼ ¦ºýÚ Å¢ðË÷¸û.
¯í¸¨Çì ¦¸¡ýÈ À¡Å¢ ¿¡ý ±ýÀ¾¡Ä¡
¯í¸û þÚ¾¢ì¸¼ý ܼ ¦ºö ÓÊ¡¾ÀÊ
«ó¾ ¦¸¡Ê þ¨ÈÅý ¾ÎòÐÅ¢ð¼¡ý....
¯í¸û ¬òÁ¡ º¡ó¾¢Â¨¼Â ±ý¦ÈýÚõ
À¢Ã¡÷ò¾¢òÐ ¦¸¡ñ§¼ þÕô§Àý «ôÀ¡....

«ýÒ Á¸ý,
Íó¾Ãã÷ò¾¢ ;÷ºý